கள்ளக்குறிச்சி: இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான போட்டிகள் முறையே வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அனைத்து மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆகிய 5 பிரிவுகளின் கீழ் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 போட்டிகளும் என மொத்தமா 50 வகையான போட்டிகள் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.
பொதுபிரிவினருக்கு (15 வயது முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம் (கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வால் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு), தடகளம்(100, 1,500 மற்றும் 3,000 மீ) குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகளும்,
பள்ளி மாணவர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ)110 மீ மற்றும் 100 மீ தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல் மற்றும் கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு (50 மீ ஓட்டம், இறகுபந்து-5 நபர்), பார்வைத்திறன் குறைந்தோர் மாற்றுத்திறனாளி (100மீ ஓட்டம்), மனவளர்ச்சி குன்றியோர் (100மீ ஓட்டம், எறிபந்து), செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி (100மீ ஓட்டம்), அரசு ஊழியர்களுக்கு (ஆண் அல்லது பெண்) கபடி, தடகளம்(100 மீ, 1,500 மீ, 3,000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.