தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை - undefined

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்ற பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

kallakurichi collector office mp meeting
kallakurichi collector office mp meeting

By

Published : Mar 10, 2020, 8:38 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் ஊரக வளர்ச்சி முகமையின் முதல் ஆட்சிமன்ற பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா தலைமையில் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் மகேந்திரன், இணை இயக்குநர் ரத்தின மாலா உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதம சிகாமணி, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த செயல்பாடுகளை மேற்கொள்வது, உறுப்பினர்கள் தேர்வு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தொண்டர் படை மாநிலத் துணைச் செயலாளர் கூத்தகுடி பாலு, ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்ற பொதுக்குழுக் கூட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details