கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலை அருகே இருக்கும் ஒரு மரத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் காயங்களோடு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள், இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.