கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியை பின்னால் சென்ற ஆட்டோ முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் வந்த காரின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, லாரியின் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த ஆட்டோவில், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேந்திரன், சரவணன் ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய மூன்று பேரின் சடலங்களை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.