தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றி திரிவதை அறிய ஆட்சியர் கிரண்குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

collector
collector

By

Published : May 5, 2020, 10:14 AM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பொதுமக்களுக்கு சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஊரடங்கு தளர்வு குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில தளர்வுகளை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உத்தரவு பிறப்பித்தார். கள்ளக்குறிச்சியில் நகரின் முக்கிய சாலைகளில் நடந்து சென்று அத்தியவாசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அரசு அறிவித்த கடைகள் தவிர்த்து மற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றி திரிவதை அறிய கிரண்குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நகரின் முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:அதி தீவிரக் கரோனா தாக்கத்தில் சென்னை - திரு.வி.க. நகரில் மட்டும் 324 பேர் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details