தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்திற்கு காரணம் என்ன? - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Oct 27, 2021, 9:12 PM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் நேற்று (அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அருகில் இருந்த பேக்கரி, ஹோட்டல் உள்ளிட்ட கடைகளில் வெடித்து சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்தது.

இந்தத் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (அக்.27) காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு (அக்.26) முதலே தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில், சம்பவ இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மின்கசிவு மற்றும் அதிகளவிலான பட்டாசு வைத்து இருந்ததால் பட்டாசுகள் ஒன்றை உரசியதில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கட்டிட இடிபாடுகளில் சிறுவன் ஒருவன் சிக்கியிருப்பதாக தெரிகிறது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற, அனுமதி இல்லாத பட்டாசு கடைகளில் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

ABOUT THE AUTHOR

...view details