கரோனா பொது ஊரடங்கால் மக்கள் அதிகமாகக் கூடும் கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், கலாசார நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த சிலரும் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி வருகின்றனர்.
இந்த கரோனா காலத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையி்ல், கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது காதலி செளந்தர்யாவை திருமணம் செய்துகொண்டார்.