கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள முருகன் கோயில் தெருவில் வசித்துவருபவர் சீனிவாசன். இவர் நேற்று (ஏப் 7) இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் தனது வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நகை மற்றும் பணம் கொள்ளை: காவல் துறையினர் விசாரணை! - கள்ளக்குறிச்சி செய்திகள்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் காலை சீனிவாசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சின்னசேலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து சின்னசேலம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் மீண்டும் வீடு வீடாக கரோனா பரிசோதனை