கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டலத்தில் காவல் துறையினர் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட காளை மாடுகள், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
வாடிவாசல் வழியாக வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆறு மாடுபிடி வீரர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.