கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் காய்ச்சல் இருமல் மற்றும் சளி உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
சமூகவிலகலை கடைப்பிடிக்கும் விதமாக, பொதுமக்கள் மருத்துவமனைக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு அவரவர் பகுதியிலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை மையம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுகாதாரத் துணை இயக்குனர் பொற்கொடி, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.