கள்ளக்குறிச்சி:சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலையில் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (ஜன.7) நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னதாக பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரம் தனது ஆதரவாளருடன் வந்திருந்தார்.
அப்பொழுது பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரம் ஆதரவாளர்கள் அவர் நியமித்த பல்வேறு நிர்வாகிகளை மாற்றியதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து எழுந்த வாக்குவாதத்தில் இரு தரப்பு பாஜகவினரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, இது அக்கட்சியினரிடையே இடையே பயங்கர மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் அங்கிருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.