கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் காலையில், மழை பெய்தபோது முருகன் என்பவரது வீட்டில் மின் இணைப்பு வயர் அறுந்து வீட்டின் இரும்பு கேட் மீது விழுந்துள்ளது.
இதனையடுத்து, அந்த கேட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததால், வீட்டில் பேசிக்கொண்டிருந்த விக்னேஷ்(23) என்ற இளைஞர், அவரது அண்ணி ரோஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.