தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட்டியைக் கல்லால் அடித்து கொலை செய்த பேரன்கள் - காவல்துறை விசாரணை - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகே நகை பணத்திற்காக சொந்த பேரன்களை மூதாட்டியை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

By

Published : Dec 12, 2021, 8:56 AM IST

கள்ளக்குறிச்சி:மூங்கில்துறைப்பட்டை அடுத்த வட மாமந்தூர் தக்கா பகுதியில் வசித்து வருபவர் அலிமாபீ (75).

இவர் டிச.10 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து தகவறிந்த மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நகைக்கு ஆசைப்பட்டு பாட்டியை கொலை செய்த பேரன்கள்

இந்நிலையில், காவல்துறையின் சந்தேகத்தின் அடிப்படையில் மூதாட்டியின் மகள் வீட்டு பேரன் சல்மான் என்பவரைப் பிடித்து செய்த விசாரணையின் அடிப்படையில் சல்மான் என்பவரும், அவருக்கு உதவியதாக மூதாட்டியின் முதல் மகனுடைய மருமகன் சௌகத் அலி ஆகிய இருவரும் மூதாட்டியிடம் உள்ள நகை பணத்திற்காக, மூதாட்டியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டியை கொலை செய்த பேரன்கள்

கொலை செய்யப்பட்ட மூதாட்டிக்கு இருவரும் பேரன்கள் ஆவார்கள். இதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் 45 கிராம் உருக்கிய தங்கம், ரூ.31,500 ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறை அவர்களை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவு - உரிமையாளர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details