தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீரான லாபத்தால் தென்னை, பாக்கு மர விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி: சீரான லாபத்தால், தென்னை, பாக்கு மர விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

improving interest of farmers in betel and coconut cultivation
improving interest of farmers in betel and coconut cultivation

By

Published : Feb 21, 2020, 11:46 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பாக்கு விவசாயத்திலும் தென்னை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக தோட்டக்கலை பயிரான பாக்கு, தென்னை மரங்களுக்கிடையில் ஊடுபயிராகக் கால்நடை தீவனங்கள், வாழை, காய்கறிகள், கிழங்கு வகைகள், முந்திரி, தேக்கு, எலுமிச்சை, பலா உள்ளிட்ட பயிர்களை விளைவிப்பதால் ஆண்டுதோறும் சீரான லாபம் கிடைக்கிறது.

இதுபோன்ற தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்வதில் அப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் பாக்கு விவசாயத்திற்கான சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி பழனியப்பன், ஒரு பாக்குக் கொட்டையை 50 பைசாவிற்கு வாங்கி, அதை பயிரிட்டால் ரூபாய் 350 வரை லாபம் கிடைக்கும் என்றும் ஒரு பாக்கு மரப் பட்டையை 2 ரூபாய் வரை விற்பனை செய்யலாம் எனவும் கூறினார்.

விவசாயி பழனியப்பன்

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென்னை, பாக்கு மரங்களில் ருக்கோஸ் எனப்படும் சுருள் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் காணப்படுவதாகவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதுபோல எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அன்பழகன் கூறினார்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அன்பழகன்

இந்த பூச்சிகளின் தாக்குதலை தடுக்கும் சில வழிமுறைகளையும் அவர் விவரித்தார்.

இதையும் படிங்க:பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details