கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டார். பின்னர் அவர் கரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறுகையில், "அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.