கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்தும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ அலுவலரிடம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டார்.