கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட திருக்கோவிலூரை இணைக்கும் தரைபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தரை பாலத்தின் மீது வெள்ள நீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்திய தரைப்பாலம் இதையடுத்து, விழுப்புரம், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் திருக்கோவிலூர் புறவழிச் சாலையிலுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்கிறது.
இதையும் படிங்க: உபரி நீரால் மூழ்கிய கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம்