தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண உதவித் திட்டத்திற்குப் பரிந்துரை: கையூட்டுப் பெற்ற அரசு அலுவலர் கைது - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: திருமண உதவித் திட்டத்திற்குப் பரிந்துரைசெய்ய கையூட்டுப் பெற்ற சின்னசேலம் சமூக நலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

government-official-arrested-for-bribery
government-official-arrested-for-bribery

By

Published : Feb 3, 2021, 8:31 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த தாகம் தீர்த்தான்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனது மகளின் திருமண உதவித் தொகைக்காக மனுவை பரிசீலனை செய்ய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியிடம் விண்ணப்பித்திருந்தார்.

விண்ணப்பத்தைப் பரிசீலித்து திருமண உதவித்தொகை பெறுவதற்கு ஜெயலட்சுமி ரூ.1,500 கையூட்டு கேட்டுள்ளார். இது குறித்து ராமலிங்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை பிரிவு அலுவலர் ஜெயலட்சுமி, கையூட்டுப் பெற்றபோது கைதுசெய்யப்பட்டார்.

அதன்பின் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: நான்கு மணி நேரமாக வீடியோ கேம் விளையாடிய மாணவர் மயக்கமடைந்து உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details