கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 46 அடி கொள்ளளவு கொண்டது கோமுகி அணை. இங்கு பாதுகாப்பு கருதி 44 கன அடி நீர் மட்டுமே சேமித்து வைக்கப்படுகிறது.
கோமுகி அணையில் இருந்து உற்பத்தியாகும் ஆறு கள்ளக்குறிச்சி வழியாக கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாறு நதியில் கலக்கிறது. இந்த அணையின் மூலம் சுமார் 1,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்வராயன் மலைப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாசன விவசாயிகளின் நலன் கருதி கோமுகி அணையின் முதன்மைக் கால்வாயிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.