தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் 5 பவுன் தங்க நகை கொள்ளை! - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: மேலூர் கிராமத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

By

Published : Nov 22, 2020, 5:49 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலூர் கிராமத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மேலூர் வடக்கு தெருவில் வசித்து வரும் ஆறுமுகம்-ராணி தம்பதியினர் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாலையில் மாடியிலிருந்து எழுந்து வந்து ஆறுமுகம் பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து துணிகள் கலைக்கப்பட்டு, 5 பவுன் நகை மற்றும் 67,000 ரூபாய் ரொக்கம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே இச்சம்பவம் குறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு ஆறுமுகம் தகவல் கொடுத்தார். அத்தகவலின் பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற சின்னசேலம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்திலே தொடர்ந்து ஆறாவது முறையாக இதுபோன்ற திருட்டு சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:காவல் துறையினருக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details