தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி
மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி

By

Published : Sep 30, 2020, 4:53 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்றிரவு (செப்.29) தனது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தனக்கு சொந்தமான 65 ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து, இன்று (செப்.30) அதிகாலை ஆடுகள் இருந்த கொட்டகை மீது மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் 65 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இதனிடையே ஆடுகளைக் காப்பாற்ற முயன்றபோது ராமச்சந்திரன் மீது மரம் விழுந்ததில் அவரும் காயமடைந்தார்.

உயிரிழந்த மொத்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஆறு லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில்,இச்சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தெருநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி... அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details