தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள் : கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் ஆட்சியரிடம் மனு - Gas Cylinder Delivery Mens Petition to Collector.

கள்ளக்குறிச்சி: சமையல் எரிவாயு சிலிண்டர் வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்ஸ்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்ஸ்

By

Published : Jun 15, 2021, 3:30 AM IST

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்கள் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சிலிண்டர் வழங்குகின்றோம்.

கரோனா பேரிடர் காலத்தில் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்ததுபோல தங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு LPG சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:ஹாட்ரிக் வெற்றியை ருசித்த அதிமுக-தொடர்ந்து மூன்றாவது முறையாக அலுவலகம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details