கள்ளக்குறிச்சி:கழிவுநீர் அகற்றும் பணியில் சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். என்று அறிவிப்பினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கழிவுநீர் சுத்தம் செய்வது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான நகராட்சிகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுடான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய பணியாளர்களை அனுமதிக்க கூடாது. உரிய கவசம் அணிந்திருக்க வேண்டும். மேற்படி சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு முதன் முறையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டாவது முறையாக மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் உயிரிழப்பு ஏற்படுமாயின் இப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளரோ அல்லது பணி அமர்த்திய நபரோ ரூபாய் 15 லட்சம் இழப்பீடாக வாரிசு தாரர்களுக்கு வழங்க வேண்டும்.
இதையும் படிங்க:கனிமவள முறைகேடுகளில் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது!