தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட பெண் தொழிலாளி - கள்ளக்குறிச்சி செய்திகள்

சிறுவங்கூரில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மருத்துவக்கல்லூரி அருகே பெண் கூலித்தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

mysteriously stabbedc  murder case  murder issue  kallakurichi news  kallakurichi latest news  kallakurichi murder  kallakurichi female worker murdered  crime news  கொலை செய்திகள்  கொலை  கொலை வழக்கு  கள்ளக்குறிச்சியில் பெண் தொழிலாளி கொலை  கத்தியால் குத்தி கொலை  கள்ளக்குறிச்சி செய்திகள்  குற்றச் செய்திகள்
கொலை

By

Published : Sep 20, 2021, 6:19 AM IST

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரில் புதியதாகக் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகேவுள்ள சிமெண்ட் செங்கல் உற்பத்தி செய்யும் இடத்தில், கூலி வேலை செய்துவந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூர்த்தி தேவி, சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

5 பேரிடம் விசாரணை

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்கூடுதல் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கேஷிப்நாயக் உள்ளிட்ட ஐந்து வட மாநிலத் தொழிலாளர்களைப் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டின் அருகில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட சண்டை - கொலையில் முடிந்த அவலம்

ABOUT THE AUTHOR

...view details