தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எள் விளைச்சல் அதிகம் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை! - விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சியில் இந்த ஆண்டு எள் விளைச்சல் அமோகமாக இருந்தும், அவைகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விளைச்சல் உரிய விலை கிடைக்காததால் - விவசாயிகள் கவலை!
விளைச்சல் உரிய விலை கிடைக்காததால் - விவசாயிகள் கவலை!

By

Published : May 9, 2021, 7:01 AM IST

கள்ளக்குறிச்சி:இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியேசற்று கூடுதலாக பெய்ததால், மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிபயிர், கம்பு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்தது.

இதையடுத்து, விவசாயிகள் குறுகியகால பயிரான எள் பயிரிட்டனர். தற்போது எள் அறுவடை நடந்து வருகிறது விளைந்த எள்களை விற்பனைக்காக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரத்துத் தொடங்கியுள்ளனர்.

விளைச்சல் உரிய விலை கிடைக்காததால் - விவசாயிகள் கவலை!

கடந்த ஆண்டு மூட்டை ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போன எள். இந்த ஆண்டு அதிக அளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது.இதையடுத்து, கரோனா தடை உள்ளிட்ட பிரச்னைகளால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைசாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வியாபாரிகள் இந்த ஆண்டு எள் மூட்டை ஒன்றிற்கு ரூ. 7 ஆயிரம் வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்வதாகவும், இதனால் தாங்களுக்கு பெருமளவில் நட்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தெலங்கானாவில் முழு ஊரடங்கு கிடையாது' - கே.சி.ஆர் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details