கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் பயன்பாட்டைக் கொண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசனம் செய்யப்பட்டுவருகிறது.
இந்த ஏரியில் மதகுக் கரை உள்ளிட்ட பகுதிகளில் தனி நபர்கள் பலர் தங்களின் சுயநலத்திற்காக ஏரியின் இடமான சுமார் 70 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 26) அந்த ஏரியை ரூபாய் 69 லட்சம் மதிப்பில் குடிமராமத்துத் திட்டத்தில் சீரமைக்க பொதுப்பணித் துறை அலுவலர்கள் வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த திருநாவலூர் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் திரண்டனர்.