தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
கள்ளகுறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள 750க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ பிரபு அரிசி, காய்கறி போன்ற பொருள்களை வழங்கினார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தியாகை, பானையங்கல், சித்தலூர், பீளமேடு, வடதெரசலூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு 25 கிலோ அரிசி, காய்கறி ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை மாநில அம்மா பேரவை இணைச்செயலரும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரபு வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் அய்யப்பா, அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.