கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்க பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலரான கிரன் குராலா தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விளக்க பயிற்சி! - kallakurichi latest news
கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விளக்க பயிற்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 146 நாட்களுக்கு பிறகு அரிசி ராஜா யானை விடுதலை!