தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் 'ஸ்கேனிங்'

கள்ளக்குறிச்சியில் மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்யும் பணியானது ஆட்சியர் ஸ்ரீ காந்த் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

மின்னணு ஒட்டு பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்யும் பணி
மின்னணு ஒட்டு பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்யும் பணி

By

Published : Dec 28, 2020, 5:01 PM IST

சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்திலிருந்து 5 கண்டெய்னர் லாரிகளில், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

அதில் கன்ட்ரோல் யூனிட் 2080, பேலட் யூனிட் 2730, விவிபேட் 2250 ஆகியவை கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (டிச.28) குடோனில் வைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்யும் பணியானது ஆட்சியர் ஸ்ரீ காந்த், அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஸ்கேன் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு டோக்கன்: அதிமுகவினர் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details