கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மதுபோதையில் இருந்ததாகக் கூறி இளைஞர் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் குடித்து இருக்கிறாரா என்பதைச் சோதனை செய்ய ஆல்கஹால் அனலைசர் (Alcohol Analyzer) கருவியை அவரிடம் கொடுத்து ஊதச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரும் அதனை ஊதிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து அனலைசர் கருவியை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு, வெறுமனே ஊதிக் காட்டும்படி அவரிடம் சொல்லியுள்ளனர். அவரும் அதற்கேற்றார்போல் மேலேயும் கீழேயும் பார்த்தவாறு ஊதி உள்ளார்.