கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்திலிருந்து கிளியூர் செல்லும் சாலையின் நடுவில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சிமெண்ட் கலவையை கொண்டு வந்த வாகனம் பணி நடைபெறும் இடத்தில் அதனை கொட்டுவதற்காக நின்று கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென மண் சரிவு ஏற்பட்டு அந்த வாகனம் சிறு பாலம் அமைக்கும் பள்ளத்தில் திடீரென தலைகீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. கலவை வாகனம் சாய்வதற்கு முன்பு அதன் ஓட்டுநர் வாகனத்திலிருந்து எகிறி குதித்து பள்ளத்தின் நடுவே விழுந்தார்.