தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் - doctor protest in ulunthurpettai

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

doctors-
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை

By

Published : May 21, 2021, 7:14 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்கள் எதுவும் முறையாக வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று(மே.20), இதைக் கண்டித்து மருத்துவமனை வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை அதிகரிக்க வேண்டுமெனவும், பெண் ஊழியர்களுக்கு ஆடை மாற்ற தனி அறை இல்லை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details