கள்ளக்குறிச்சி:தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில், தேமுதிகவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தங்களது கட்சியினரை தயார்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் தேமுதிக தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

dmdk executive meeting held in kallakurichi
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தனியார் மண்டபத்தில் தேமுதிக தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேமுதிக அவைத்தலைவர் V.இளங்கோவன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன், தேர்தல் பிரிவு செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.