தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்! - மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 650க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

district-level-games-for-the-chief-ministers-cup
district-level-games-for-the-chief-ministers-cup

By

Published : Feb 20, 2020, 8:04 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இந்தப் போட்டிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளின் முதல் நாளான நேற்று கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க:அதிமுக கூட்டத்தில் சலசலப்பு!

ABOUT THE AUTHOR

...view details