தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை: திமுக, விசிக சாலை மறியல் - பெரியார் சிலைக்கு அவமரியாதை

கள்ளக்குறிச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு அடையாளம் தெரியாத சிலர் செருப்பு மாலை அணிவித்ததையடுத்து திமுக, விசிக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

disrespect-to-the-periyar-statue
disrespect-to-the-periyar-statue

By

Published : Jul 17, 2020, 10:03 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் மூன்று சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அடையாளம் தெரியாத சிலர் செருப்பு மாலை அணிவித்தனர்.

அதனால் பல்வேறு தரப்பினர் அதற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பெரியார் சிலையை அவமரியாதை செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி திமுக, விடுதலை சிறுத்தை, திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் தண்ணீர் ஊற்றி பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:நோட்டாவோடு போட்டிப் போட வைத்த கடுப்பு அவர்களுக்கு இருக்காதா? - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின் !

ABOUT THE AUTHOR

...view details