கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தால் கரோனா தடுப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'பெல் மிஸ்லர்' எனப்படும் ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரமானது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு! - dis infection sprayed
கள்ளக்குறிச்சி: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா: கள்ளக்குறிச்சியில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!
இந்த ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் ஒரு கருவியின் மதிப்பு மூன்று லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாகும். இரண்டு கிருமிநாசினி இயந்திரங்களை மூன்று தொழிலதிபர்கள் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த இயந்திரத்தின் டேங்கரில் ஹைப்போகுளோரைட் திரவத்துடன் நீர் கலந்து ஒன்றரை மணிநேரம் இடைவிடாது தெளிக்கப்படும் வசதிகொண்டதாகும் இந்த இயந்திரம்.