தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2020, 1:33 PM IST

ETV Bharat / state

'மருத்துவ இடஒதுக்கீடு விவகாரத்தை திருமாவளவன் பேச்சை வைத்து பாஜக திசை திருப்புகிறது'

கள்ளக்குறிச்சி: மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டு பிரச்னையை மறைப்பதற்காகவே பாஜக, திருமாவளவன் பேச்சை சர்ச்சையாக்கி மக்களை திசை திருப்பி விட முயற்சிக்கிறார்கள் என தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குநர் கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குனர் கவுதமன் பேட்டி
தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குனர் கவுதமன் பேட்டி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு கலந்து கொள்ள வந்திருந்த தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கூறிய அவர், “ஆளும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகத்தைச் செய்து வருகின்றது. குறிப்பாக, மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தாமதம் செய்வதை மறைப்பதற்காக திட்டமிட்டு விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சை சர்ச்சையாக்கி, மக்களை திசை திருப்பி விட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது, இதுபோன்ற செயல்களால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குநர் கவுதமன் பேட்டி

எல். முருகன், எச்.ராஜா, குஷ்பூ, நமீதா, காயத்திரி ரகுராம், போன்றவர்களால் தமிழ்நாட்டில் கலவரம் தூண்டப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. இது முறியடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details