கள்ளக்குறிச்சி: மந்தைவெளியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழாவானது நேற்று (ஏப்.16) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ஹர ஹர கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.