கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணி அதிகளவில் நடைபெறுவதாக, மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் இன்று கல்வராயன் மலை பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மேல்பாச்சேரி அருகே 1, 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.