கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கல்வராயன்மலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, முண்டியூயூர் கிராமத்தில் பெரிய ஆற்றில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக 5 பிளாஸ்டிக் பேரல்களில் வைத்திருந்த சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கொட்டி அழித்தனர்.
அதேபோன்று துரூர் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், துரூர் கிராமத்தை சேர்ந்த தணிகாசலம், மொட்டையன், ராஜேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மூவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கைகோர்த்த தமிழ்நாட்டு எம்பிக்கள்!