கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி சமூக இடைவெளி இல்லாமல் மருந்து கடை, மளிகை கடை, இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை காலி செய்த துணை ஆட்சியர்! - கள்ளக்குறிச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை காலி செய்த துணை ஆட்சியர்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 10க்கும் மேற்பட்ட கடைகளை காலி செய்ய துணை ஆட்சியர் உத்தரவிட்டார்.
![சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை காலி செய்த துணை ஆட்சியர்! கடைகளை காலி செய்த துணை ஆட்சியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6676217-thumbnail-3x2-klk.jpg)
கடைகளை காலி செய்த துணை ஆட்சியர்
இதனை தடுக்கும் விதமாக மாவட்ட துணை ஆட்சியர் எம்.குமார் தலைமையில் அலுவலர்கள் மருந்து கடை, மளிகை கடை இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பத்துக்கும் மேற்பட்ட கடைகளை இழுத்து மூடினர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய மனமகிழ் மன்றத்திற்கு சீல்