கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைத்துள்ள கோமுகி அணையை நம்பியுள்ள பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் கைக்கான் பகுதியில் "கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாடு அரசு தடுப்பணை கட்டி கோமுகி அணைக்கு வரும் நீரை சேலம் மாவட்டத்திற்கு திரும்பும் முயற்சியில் இறங்கிவுள்ளது.
கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி: கோமுகி அணையை நம்பியுள்ள பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக்கோரியும், நீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பரிகத்தில் தடுப்பணை கட்டக்கோரியும், வெள்ளிமலை மற்றும் கீழ்பரிகம் பகுதி வனத்துறை சோதனைச் சாவடிகளில் விவசாய விளைப்பொருள்களை எடுத்து செல்லும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளிமலை பேருந்து நிலைய பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பாக கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மாநில துணை செயலாளர் சின்னசாமி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பு குழுவை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கைக்கான் வளைவு திட்டத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.