கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், ”நான்கு ஆண்டுகள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடித்து கடந்த ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜனவரி 20ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் நாளை (பிப்.8) தமிழ்நாட்டில் சசிகலாவின் வருகையினால் அதிமுகவினர் அஞ்சுவது ஏன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்கள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என தமிழ்நாடு காவல் துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல் துறை தலைவர் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். காவல் துறை மிகப்பெரிய கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடுவது சரியல்ல. காவல்துறை தலைவர் திரிபாதி நேர்மையானவர். அவர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க:சசிகலா நாளை தமிழ்நாடு வருகை: வேலூரில் அமமுகவினர் வைத்த போனர்கள் அகற்றம்!