கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தெரு முழுவதுமே சாராய வாடை வீசிய நிலையில், வீடு வீடாக சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏழுமலை (40) என்பவர் செல்போனில் யூடியூப் பார்த்துக்கொண்டே வீட்டில் நூதன முறையில் சாராயம் காய்ச்சி கொண்டிப்பது கண்டறிப்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.