கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 310 ஆக்சிஜன் படுக்கைகளும், 40 ஐசியு படுக்கைகளும் உள்ளன.
தண்ணீர் இல்லாத கழிப்பறைகள் - கரோனா நோயாளிகள் வேதனை - அரசு தலைமை மருத்துவமனை கரோனா வார்டு
கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை கரோனா வார்டு கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என கரோனா நோயாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
![தண்ணீர் இல்லாத கழிப்பறைகள் - கரோனா நோயாளிகள் வேதனை kallakurichi GH](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11791759-855-11791759-1621248232733.jpg)
kallakurichi GH
இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இங்குள்ள கழிப்பறைக்குள் இரண்டு நாட்களாக தண்ணீர் வரவில்லை எனு நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே இதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் நோயாளிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.