பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மகளிர் ஆணைய தலைவி ஆலோசனை! - பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
கள்ளக்குறிச்சி: பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தான மனுக்களை மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்- மாவட்டத்திலிருந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மகளிர் ஆணையத்திற்கு வந்து, நிலுவையிலுள்ள புகார் மனுக்கள் குறித்து சீராய்வு கூட்டம் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா, மாநில மகளிர் ஆனைய இணை இயக்குநர் ரேவதி, காவல்துறை கண்கானிப்பாளர் ஜியாவுல்ஹக், வருவாய் அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த சீராய்வு கூட்டத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள், அவர்களுக்கு சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மகளிர் ஆணையத்தலைவர் கண்ணகி பாக்யநாதன், கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.