கள்ளக்குறிச்சி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோகிணி (58). இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் அலுவலராக உள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுவினரிடமிருந்து வசூல் செய்த பணத்தை தனியார் வங்கியில் செலுத்தும்போது, இவருக்கு கிராம நிர்வாக அலுவலரின் கணவர் அன்பு உடன் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது அன்பு ரோகிணியிடம் கடன் பெற்று வந்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் நகையை திருப்பப்பெற ரூ. 20 லட்சம் வேண்டும் என அன்பு ரோகிணியிடம் கேட்டுள்ளார். அதை நம்பி ரோகிணியும் அன்பு கேட்ட பணத்தை கொடுத்தார்.