தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் - Kallakkurichi district news

கள்ளக்குறிச்சி: கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 15, 2020, 10:19 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைக்கான் வளைவு தடுப்பணை கட்டும் திட்டத்தை முதலமைச்சர் கைவிடக் கோரியும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காத்திடவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தோழமை கட்சிகள் சார்பில் கச்சிராயப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பு குழு கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார்.

கைக்கான் வளைவு திட்டத்தை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அப்போது கச்சிராயபாளையம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது’ - அண்ணாமலை தாக்கு

ABOUT THE AUTHOR

...view details