தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - Marxist Communist Party

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாஸ்மாக் கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 24, 2020, 4:59 PM IST

கள்ளக்குறிச்சியில் வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், அரசுப்பள்ளிகள், பள்ளிவாசல், நீதிமன்றம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது பிரியர்கள் மது அருந்தி விட்டு, அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர்.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையும், நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் அப்புறப்படுத்தக்கோரி, பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு டாஸ்மாக் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டும் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யியின் போராட்டத்தால் அப்பகுதியில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க:ஆலந்தூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details