கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 1,000 ரூபாய் டெபாசிட் தொகை கட்டினால் குடிநீர் இணைப்பிலிருந்து புதிய லைன் எடுத்து கை அடி பம்பு வழங்கப்படும். மேலும், அதற்கு மாதம் மாதம் 30 ரூபாய் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குடிநீர் இணைப்புக்கு கட்டணம் வசூல் - கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - ஊரடங்கு உத்தரவு
கள்ளக்குறிச்சி: மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது மட்டுமில்லாது பொது குடிநீர் லைன் அனைத்தும் துண்டிக்கப்படும் என பொதுமக்களை அச்சுறுத்தி டெபாசிட் பணம் வசூலிக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பொது குடிநீர் இணைப்பு தொடர்ந்திட கரோனா காலத்திலும் மக்களிடம் கந்துவட்டி கும்பல் போல் செயல்படும் அரசுகளைக் கண்டித்து திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்களை அச்சுறுத்தி டெபாசிட் தொகையை கட்ட வைக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.